கடந்த நான்கு ஆண்டுகளில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான விருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டார்.
கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, அரசியல் ஆட்சி மாற்றம் என்பன இயக்கச்சமன்பாட்டை நிலைகுலையச் செய்தது இருந்தபோதிலும், சட்டத்தரணி முஷாரப் எம்.பி தீர்வுகளை நோக்கி வினைத்திறனாக செயற்பட்டு வெற்றியும் கண்டார். 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்த கடினமான சூழ்நிலையிலும், பல கோடிக்கும் அதிகமான மொத்த முதலீட்டுடன், இந்த முயற்சிகள் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளின் வாழ்வியல் தேவைகளான, கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

சட்டத்தரணி முஷாரப், தனது பாராளுமன்ற உறுப்புரிமை காலப் பகுதியில் செயல்வீரராக திகழ்ந்தார் என்பதற்கு அவர் வழங்கிய தீர்வுகளும் திட்டங்களுமே சாட்சியாய் இருக்கின்றன. செயலால் பேசும் சேவகனாய் தன்னை தொடர் இயங்குநிலையில் வைத்திருந்ததால், manthri.lk தளத்தின் சுயாதீன தரப்பபடுத்தலில் முஷாரப் எம்.பி. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்றிறன் அடிப்படையில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்தததை நாம் ஞாபகமூட்டுகிறோம்.
1. முஷாரப் எம்.பியின் சிறப்பான சாதனைகளும் நீடித்த தீர்வுகளும்:
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காணி விடுவிப்பு (ஆகஸ்ட் 2023)
- 75 ஆண்டுகால பொத்துவில் முகுது மஹா விகாரை காணிப் பிரச்சினைக்கு தீர்வு
- 450 குடும்பங்களை இடப்பெயர்வில் இருந்து பாதுகாத்தது
- 2345/37 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் சட்டபூர்வ காணி உரிமை வழங்கப்பட்டது
- மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியான போராட்டம்
- 65m சுனாமி வீட்டுத்திட்டம் விடுவிப்பு (ஏப்ரல் 2023)
- 19 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த மருதமுனை, மேட்டுவட்டை 65 மீற்றர் சுனாமி வீட்டுத்திட்டம் விடுவிப்பு
- நீண்டகாலமாக காத்திருந்த சுனாமி பாதிப்பு மக்களுக்கு நீதி
- சம்புநகர் காணி உரிமம் (மே 2023)
- 16 ஆண்டுகாலமாக தேங்கியிருந்த அட்டாளைச்சேனை சம்புநகர் வீட்டுத்திட்ட குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டது
- உள்ளூர் குடும்பங்களின் நீண்டகால நிச்சயமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி
- நாவிதன்வெளி காணி உரிமை (மே 2023)
- நாவிதன்வெளி பிரதேசத்தில் 10 பேர்ச் பரப்புக்கும் மேற்பட்ட காணிகளுக்கு மட்டுமே காணி உரிமம் பெறப்பட முடியும் என்ற கட்டுப்பாட்டை உடைத்து குறைந்தது 5 பேர்ச் பரப்பு காணிகளுக்கும் காணி உரிமம் பெற ஆவண செய்தமை.
- ஒருவர் தனக்கு சொந்தமான காணிகளை தனது பரம்பரைக்கு பகிர்ந்து உரித்தாக்குவதில் இருந்த உரிமைசார் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டது.
- மேலும் பல முக்கிய சாதனைகள்:
- சம்மாந்துறை கரங்கா வட்டை காணி விடுவிப்பு
- பொத்துவில் வைத்தியசாலையை Type A ஆக தரமுயர்த்தி மத்திய அரசின் கீழ் கொண்டுவந்தது
- பொத்துவில் உப பஸ் நிலையத்தை பிரதான பஸ் நிலையமாக மேம்படுத்தியது
- பொத்துவில் ஒசுசல மருந்தகம் நிறுவப்பட்டது
- பொத்துவில் கல்வி வலய உருவாக்கம் இறுதிக்கட்டத்தில்
இந்த சாதனைகள் காட்டுவது:
- நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உறுதி
- அடிப்படை தேவைகளில் கவனம்: வீடு, சுகாதாரம், கல்வி
- மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் திறன்
- பல்வேறு அரசு மட்டங்களுடன் இணைந்து செயல்படும் திறமை
- உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்பு
2. பாராளுமன்றில் முஷாரப் எம்.பியின் முக்கிய செயற்பாடுகளும் சமர்ப்பிப்புகளும்:
- இளைஞர் கல்வி மேம்பாட்டுக்கான முன்னெடுப்பு
- இளைஞர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை விஸ்தரிப்பதற்கான பரிந்துரைகளை பாராளுமன்றில் சமர்ப்பித்தார். (https://t.ly/9Nxu4)
- உயர் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான விரிவான பரிந்துரைகள்
- இளைஞர்களின் எதிர்காலத்திற்கான தெளிவான திட்டமிடல்
- கல்வி அணுகலை அதிகரிக்கும் முயற்சிகள்
- நிபுணத்துவ அணி உருவாக்கம்
- "துறைசார் வல்லுனர்களின் கூட்டிணைவு என்ற செயலணி ஒன்றை கட்டமைத்தல்" தொடர்பான பிரேரணை ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. (https://t.ly/DAh68)
- திறன்மிக்க நிர்வாகத்திற்கான புதிய அணுகுமுறை
- வல்லுநர்களின் அறிவை பயன்படுத்தும் திட்டம்
- விவசாய நில உரிமைக்கான குரல்
- அம்பாறை மாவட்டத்தில் அரசு கையகப்படுத்திய விவசாயக் காணிகளை செய்கைகக்காக விடுவிக்குமாறு கோரி சபை ஒத்திவைப்பு வேளை பிரரேரணை. (https://t.ly/bhbYO)
- விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்புக்கான முயற்சி
- சபை ஒத்திவைப்பு வேளையில் முக்கிய பிரேரணை